குண்டும் குழியுமான சாலை

Update: 2025-10-12 08:08 GMT

திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் உள்ள சாரங்கபாணி நகரின் சாலையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படவில்லை. பழைய சாலைகளும் சுக்குநூறாக உடைக்கப்பட்டு குண்டும் குழியுமாக கிடக்கிறது. இந்த சரியற்ற சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகிறது. சாலையில் கழிவுநீரும் தேங்குவதால் பயங்கர துர்நாற்றமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள வேலைகளை முடித்து, புதிய சாலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்