புகார் எதிரொலி

Update: 2025-10-12 07:45 GMT

சென்னை பள்ளிக்கரணை, ராம் நகர் தெற்கு விரிவாக்கம் 12-வது தெருவில் உள்ள மழைநீர் வடிகாலின் மேற்புற மூடி சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே நீண்டு பொதுமக்களுக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து துரித நடவடிக்கையாக மழைநீர் வடிகாலின் மேற்பகுதியை அமைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு துணை நின்ற ‘தினத்தந்தி‘ பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்