செண்பகராமன்புதூர் சுடலைமாடசாமி ஆற்றங்கரை கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகால் ஓடையில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் பாய்தேடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி வடிகால் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.