கம்பம் சுருளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சலவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுநீர் முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றுநீர் மாசடைகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.