ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் தெற்கு தெரு பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் உள்ள சாலையில் சில வாரங்களாக கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.