சுகாதார சீர்கேடு

Update: 2025-10-05 09:58 GMT

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அழகியமண்டபம் பகுதியில் பயணிகள் நிழற்குடை இருந்தது. இந்த நிழற்குடை அகற்றப்பட்டு சாலையை அகலப்படுத்துவதற்காக சில மாதங்களுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அநத பகுதியில் உள்ள ஓடையில் இருந்து கழிவுநீர் சாலையில் பாய்வதால் அங்கு துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி போர்க்கால அடிப்படையில் சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்டோ சேவியர், அழகியமண்டபம்.

மேலும் செய்திகள்