பாதாள சாக்கடை மூடி சரிசெய்யப்படுமா?

Update: 2025-10-05 09:44 GMT

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 5-வது மண்டலம் அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட ராமலிங்க நகர் முதல் மெயின் ரோட்டின் நடுவே பாதாள சாக்கடை மூடி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மூடி உடைந்து அந்த இடம் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்