பெரியகொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட தாசப்பகவுண்டன்புத்தூரில் கே.என்.பாளையம் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் பணியை முடிக்காமல் பாதியில் விட்டுவிட்டனர். இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி வீடுகளுக்குள் படையெடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் கட்டும் பணியை விரைவில் முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.