விழுப்புரம் நகராட்சி 16-வது வார்டு ஹவுசிங் போர்டு காலேஜ் நகர் பாரதியார் தெருவில் சிறுமழை பெய்தாலும் தண்ணீர் வழிந்தோட வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் அதில் கழிவு நீரும் கலப்பதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.