திருச்சி மாநகராட்சி 54-வது வார்டுக்கு உட்பட்ட பெரியமிளகுபாறை நாயக்கர் தெரு மற்றும் செல்வ நகருக்கு இடைபட்ட பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளதால் அவற்றில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தூர்வாரப்படாமல் உள்ள இந்த கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரி சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.