சாலையோரம் செல்லும் கழிவுநீர்

Update: 2025-09-28 15:47 GMT

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், ஹைஸ் கூல் அருகே உள்ள குறிச்சிநகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி சாலை ஓரத்தில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்