கொசுத் தொல்லை

Update: 2025-09-28 10:34 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கடம்பூர் கிராமத்தில் குணமங்கலம் கிழக்குத் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகே சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்