கொசுத்தொல்லை

Update: 2025-09-28 10:34 GMT

திருச்சி மாவட்டம் மேல சிந்தாமணி 12-வது வார்டு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கோட்டை வாய்க்கால் பல வருடமாக சுத்தம் செய்யப்படாததால், கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உள்பத்தியாகி பொதுமக்களை தீண்டுகிறது. இதனால் அவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்