புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு காவேரி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சில இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டிய மண்ணை அகற்றாமல் குடியிருப்பு பகுதியில் கொட்டிவிட்டனர். இதனால் இப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இன்னும் வடிகால் அமைக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.