அந்தியூர் வெள்ளித்திருப்பூர் சந்தை அருகே உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க அதிகாரிகள் முன்வருவார்களா?