திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை

Update: 2025-09-21 11:25 GMT

திருச்சி உறையூர் நவாப் தோட்டம் நெசவாளர் காலனி இரண்டாவது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்யும் வகையில் ஆங்காங்கே மூடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் ஒரு மூடி சேதம் அடைந்து பாதாள சாக்கடை திறந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் இந்த பாதாள சாக்கடைக்குள் நிலைதடுமாறி உள்ளே விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையை மூட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்