நாமக்கல் மாவட்டம் மணியனூர் ஊராட்சிக்குட்பட்ட தெருக்களில் சமீபத்தில் சாக்கடை கால்வாய் பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால் அவை தகுந்த முறையில் சிமெண்டு சிலாப்புகளை கொண்டு மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த கால்வாயில் அவர்கள் விழுந்து காயம் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் சேதமடைந்த இந்த தெருக்களின் சாலைகளில் மழைநீர் தேங்குவதாகவும் இப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆதிமூலம், மணியனூர்.