சிங்காநல்லூர் அருகே நீலிக்கோணாம்பாளையம் ராமசாமி நகரில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை தூர்வாரும் ஊழியர்கள் கழிவுகளை அருகிலேயே சாலையோரங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர். அவை பல மாதங்களாக அகற்றப்படுவது இல்லை. இதனால் புதர்கள் வளர்ந்து வருகிறது. அதில் விஷப்பூச்சிகள் பதுங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்.