ஈரோடு மாநகராட்சி 55-வது வார்டுக்குட்பட்ட சாஸ்திரி நகர் கருப்பண்ணசாமி கோவில் 2-வது வீதி இணைப்பு சாலையில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கிறது. இந்த கழிவுநீ்ர் தற்போது பெய்த மழையால் நிரம்பி சாலையில் ஓடி வருகிறது. இதனால் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. எனவே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.