ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை 20-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் மேல் போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் மூடி உடைந்து, திறந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் சிறுவர்-சிறுமிகள் கழிவுநீர் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து திறந்த நிலையில் இருக்கும் கழிவு நீர் கால்வாய்களை சிமெண்டு சிலாப் மூலம் மூட வேண்டும்.
-நித்தியானந்தம், காரை.