புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2026-05-10 16:01 GMT
பண்ருட்டி அடுத்த ஆ.நத்தம் கிராமத்தில் உள்ள சாலையில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. இது பற்றி கடந்த வாரம் புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்றி சாலையை சரிசெய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்