செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் பகுதிகளும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஆத்தூர் வடபாதி, ஆத்தூர் தென்பாதி மற்றும் வடகால், அம்பேத்கர் நகர், எம்.ஜி.ஆர். நகர், மெஜெஸ்டிக் அவென்யூ, சாய் கோல்டன் சிட்டி உள்ளிட்ட பகுதிகளின் பெரும்பாலான மழைநீர் வடிகால்வாய்கள் செடி,கொடிகளால் நிறைந்து புதர்மண்டி காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இன்னும் சீரமைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை மழைநீர் வடிக்கால்வாய் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்கவேண்டும்.