செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஜே.சி. நகர் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து பல்லாங்குழி சாலையாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் குளம் போல அந்த சாலை காட்சியளிக்கிறது. இந்த பகுதியின் பல இடங்களில் மின் ஒயர்கள் அறுந்து ஆபத்தான நிலையிலும் காணப்படுகிறது. துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்கவும், ஓயர்களால் ஆபத்து ஏற்படும்முன் அதை சரிசெய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.