திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கோவில்பதாகை பூம்பொழில் நகர் அண்ணா தெருவின் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த சாலை மிகவும் சுகாதார சீர்கேடுடன் இருக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வாகன ஓட்டிகளும் அந்த பகுதியை கடக்கும்போது முக சுளிப்புடனே செல்லும் அவலநிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.