சென்னை பெருங்குடி சந்தோஷ் நகர் சாலையின் நடுவே உள்ள மழைநீர் வடிகால் மூடி உடைந்து அதனுள் குப்பைகள் தேங்கி, ஆபத்தான நிலையில் கிடக்கிறது. அருகில் உள்ள குடியிருப்பின் குழந்தைகள் விளையாடும் இடம் என்பதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் பழுதடைந்த மழைநீர் வடிகால் மூடியை சீரமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.