பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணி

Update: 2025-09-14 16:35 GMT

பெரியகுளம் தாலுகா ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மங்கம்மாள் சாலை முதல் தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியேற வழியின்றி கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்