விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தில் போதிய வாறுகால் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் வாறுகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?