கோபி அருகே தாசப்பகவுண்டன்புதூர் கே.என்.பாளையம் ரோட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாக்கடை கால்வாய் கட்டும் பணியை தொடங்கினர். ஆனால் பணியை முடிக்காமல் பாதியில் விட்டுவிட்டனர். இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள மின் கம்பமும் சாயும் அபாய நிலையில் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.