தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2025-09-14 13:33 GMT

தஞ்சை பூக்காரதெரு சாலையில் பாதாள சாக்கடை குழி உள்ளது. இந்த குழியில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும், கழிவுநீர் சாலையோரம் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து பாதாள சாக்கடை குழியை சீரமைக்க நடடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்