சுகாதார சீர்கேடு

Update: 2025-09-14 11:58 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா நகர் பிள்ளையார்கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் கடந்த சில நாட்களாக சரிவர சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்