திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கன்னிகாபுரம் 8-வது காந்தி தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியின் கழிவுநீர் கால்வாய்-க்கு மேல்தளம் அமைக்கப்பட்டு, கழிவுநீர் சரிவர செல்லமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுக்கும் என்று அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.