சுகாதார சீர்கேடு

Update: 2025-09-07 11:58 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றில் கோரைப் புற்களும், சீமைக்கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்து முட்புதராக காட்சியளிப்பதால், சாக்கடை நீர் வெளியேற முடியாமல் ஒரே இடத்தில் குளம் போல் தேங்கி நிற்கின்றது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மழை வந்தால் தண்ணீர் வெளியேற முடியாமல் ஒரே இடத்தில் மீண்டும் தேங்கி நிற்க வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நங்காஞ்சி ஆற்றில் அடர்ந்து வளர்ந்துள்ள கோரை புற்கள் மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி ஆற்றை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்