அரியலூர் நகரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் ஏராளமான வீடுகளும், கடைகளும் உள்ளதால் நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் அதிகளவில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக இங்குள்ள பழைய குப்பைக்கிடங்கு அருகே உள்ள கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி, சாலையில் கழிவுநீர் வழிந்தோடி செல்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதுடன் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.