அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பாரதியார் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிமடம் கடைவீதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாரதியார் நகர் செல்லும் சாலை ஓரத்தில் ஆறு போல ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.