நசியனூர் பெரியார் நகரில் உள்ள சாக்கடை கால்வாய் கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணிர் புகுந்துவிடுகிறது. மேலும் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. சாக்கடை கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?