கள்ளக்குறிச்சி- துருகம் சாலையோரம் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதில் நாய்கள், பன்றிகள் மேய்கிறது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.