வண்டிப்பாளையம் வரவூர்மாரியம்மன் கோவில் எதிரே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீரானது வீணாக வெளியேறியது. இதுகுறித்த செய்தி புகார்பெட்டியில் வெளியானதையடுத்து அதிகாரிகள் குடிநீர் குழாயை சரிசெய்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், வாகனஓட்டிகள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.