சென்னை அடையாறு பகுதியில் காமராஜ் அவென்யூ 1-வது தெருவில் கடந்த 1 மாதங்களுக்கு மேல் பாதாளசாக்கடை மூடி சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது அந்த பகுதியின் பிரதான சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுபவர்கள் அதிகம். மிகுந்த துர்நாற்றமும் வீசுகிறது. கழிவுநீர் தேங்குவதால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் பள்ளத்தை மூடி பாதாளசாக்கடை மூடியை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.