கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும்

Update: 2025-08-24 12:11 GMT

கரூர் மாவட்டம் திருக்காடுதுறை கரைப்பாளையம் அருகே ஆலமரத்து மேடு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் செல்ல கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்ட நிலையில் இன்னும் கால்வாய் அமைக்கவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்