கரூர் மாவட்டம், வெங்கமேடு செங்குந்தநகர் 3-வது தெருவில் கழிவுநீர் வாய்க்கால் பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், இந்த பாலத்தின் மேல் திட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டு, கான்கிரீட் இரும்பு கம்பிகள் பெயர்ந்து உள்ளது என்றும், இதனால் இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த பள்ளத்தில் வாகனங்களை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர் என்றும் மூன்று மாததிற்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது. தற்போது இந்த பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி முற்றிலும் இடித்து தோண்டப்பட்ட நிலையில், மேற்படி பணியை தொடங்காமல் அப்படியே கிடப்பில் போட்டு உள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி மக்கள் நலன் கருதி இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.