பழனி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கழிப்பறை அருகிலேயே திறந்தவெளியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.