சிவகங்கை நகராட்சி வார்டு எண்-15 அம்பேத்கர் நகர் அங்கன்வாடி மையம் அருகே கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், அருகில் இருக்கும் குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் தொட்டியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.