கும்பகோணம் 3-வது வார்டில் ஶ்ரீராம் நகர்-1 மற்றும் ஶ்ரீராம் நகர் 2-க்கு இடையில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகால் பராமரிப்பின்றி சாக்கடை தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்ய வேண்டும். கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.