தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-08-10 11:56 GMT

திருச்சி மாவட்டம், மருகாபுரி அருகே உள்ள பாலக்குறிச்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரி சரி செய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்