திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லாத்துகோம்பையில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மழைக்காலங்களில் கொல்லிமலையில் இருந்து வரும் மழைநீர் சாலைகளில் தேங்கி நிற்பதை தவிர்ப்பதற்காகவும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அகற்றுவற்காகவும் வடிகால்வசதி வேண்டி கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து இங்கு புதிதாக வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வடிகால் வாய்க்கால் வளைந்து நெளிந்து செல்வதுடன், அரை அடி அகலத்தில் குறுகளாக அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் தேங்கவும், பராமரிப்பதில் குறைபாடுகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வடிகால் வாய்க்காலை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.