கால்வாயில் அடைப்பு

Update: 2025-08-03 17:52 GMT

கோவை கணபதி வரதராஜூலு நகர் 5-வது வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் சிலர் கல் வைத்து அடைத்து உள்ளனர். இதனால் கழிவுநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து அந்த பகுதியில் வசிப்போருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த கால்வாயில் ஏற்படுத்தப்பட்டு உள்ள அடைப்பை நீக்கி, கழிவுநீர் சீராக வழிந்தோட அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்