ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜம்பட்டி அருந்ததியர் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இதன் காரணமாக இந்த ஊரில் இருந்து அனைத்து கழிவுகளும் பிரதான சாலையில் வெளியேற்றப்படுகிறது. இதனால் இப்பகுதியில் பென்னாகரம்-ஏரியூர் பிரதான சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் தான் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.