திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி இந்திரா நகர் பொன்னியம்மன் தெருவில் பல நாட்களாக கழிவு நீர் கால்வாய் உடைந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.