சென்னை அயப்பாக்கம்-திருவேற்காடு சாலையில் ஏராளாமான வாகனங்கள் வந்து செல்லும். இந்த சாலையின் ஓரத்தில் கழிவுநீர் சமீப காலமாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.