கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2026-03-08 14:40 GMT

சேந்தமங்கலம் அருகே துத்திக்குளம் கிராமம் பிரதான சாலை பகுதியின் அருகே செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் குப்பை கூளங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போடப்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி இருக்கிறது. அப்பகுதியில் பள்ளிக்கூடம், கடைகள், பஸ் நிறுத்தம் ஆகியவை இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் பகுதியில் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க அந்த வாய்க்கால் தூர்வாரப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் செய்திகள்